Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி ஷோபனா நடனமாட மாட்டாரா???

இந்திய திரையுலகையே தன் பரதக்கலையால் அசர வைத்தவர் தான் ஷோபனா. கதாநாயகி என்றாலே வெறும் அழகு பொருளாக பார்த்து வந்த நிலையில் அழகுடன் மட்டும் இல்லாமல் தன் நடன திறமையால் எல்லோரையும் ஈர்த்தவர் இவர்.

"தளபதி"யில் தொடங்கி "போடா போடி" வரை பல படங்களில் நடித்த இவர், இனி படங்களில் நடனமாடும் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஏனென்றால் "தனக்கு வயதாகி கொண்டு போகிறது என்றும், இனியும் திரையில் நடனமாடி கொண்டு இருக்க இயலாது" என்று கூறியுள்ளார்.

ஷோபனா தற்போது வெளிவர இருக்கும் "கோச்சடையான்" படத்திலும் பரத நாட்டிய கலைஞராக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.