Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் எங்க "தலதளபதி" மாஸ்!!!

சமீபத்தில் நம்ம "தல"யும், "தளபதி"யும் சத்தமே இல்லாம ஒரு சாதனை பண்ணிடாங்க. தமிழ் திரையுலகம் மட்டும் இல்லைங்க, இந்திய திரையுலகமே ரஜினி-கமலுக்கு பிறகு கவனிப்பது "தலதளபதி" நட்பு தாங்க.

இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் சிலர் தேவையில்லாமல் வாய் சண்டையில் ஆரம்பித்து அடிதடி வரை கொண்டு செல்கின்றனர், இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தில் உள்ள வலைத்தளங்கள் தான்.

ஆனால் அந்த வலைதளத்திலையே இவர்கள் இப்போது ஒரு சாதனை செய்துள்ளனர். விஜய் அவர்களின் சொந்தமான "ஆக்டர் விஜய்" என்னும் பக்கம் 10 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர், அதே போல் ரசிகர்களால் இயக்கப்படும் "அஜித்" என்ற பக்கம் 10 லட்சம் லைக்கை பெற்று உள்ளது. இதை இரு தரப்பு ரசிகர்களும் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

"தலதளபதி" ரசிகர்கள் இருவருக்கும் "சினி உலகம்" சார்பாக வாழ்த்துக்கள்.

அஜித் பற்றிய முழுமையான தகவல்- விஜய் பற்றிய முழுமையான தகவல்