டிஜிட்டல் பிரோ புரொடக்ஷ்ன்ஸ் வழங்கும் கலை ஒன்றுதான் பாடலை வள்ளுவன் அவர்கள் இசையமைக்க, இளங்கோ அவர்கள் பாடியுள்ளார்.
தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சம் அழிந்து வரும் நிலையில் இது போன்ற படைப்புகளை பார்க்கும் போது மனதில் சந்தோஷம் எழுகிறது.
நடன கலையில் மிகவும் அழகான கலை பரத நாட்டியம். கலை என்னும் ஒற்றை சொல்லில் உள்ள அர்த்தங்களை காட்சிகளாலும், வரிகளாலும், இசையாலும் சேர்த்து உருவாக்கியுள்ளனர் இப்பாடல் குழுவினர்.
கலை ஒன்றுதான் வாழ்வில் நிலை என்று நினை மனமே…. அழகான இசை சேர்த்து உருவான பாட்டுடன், அலங்காரம் குறையாது என்ற வரிகள் பாடலை இன்னம் ரசிக்க வைக்கிறது.
நாட்டியத்தை மையமாக கொண்டு அருமையாக படைத்த இப்பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.