மகேஷ் பாபு தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் "ஆக்டு". இப்படத்தின் சண்டைகாட்சி சமீபத்தில் தான் நடந்து முடிந்தது, இதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்தியாவின் ஏதேனும் குளிர் பிரதேசத்தில் நடத்த போகிறார்களாம்.
அதற்காக அவர்கள் தேர்ந்து எடுத்த இடம் காஷ்மீர் தானாம், ஆனால் அங்கு பாடல் காட்சி எடுக்க போகிறார்களா அல்லது ஏதும் படத்திற்கான முக்கிய காட்சி எடுப்பார்களா என்று படக்குழு அறிவிக்க மறுத்துவிட்டது.
இதில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்க, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல இசையமைப்பாளர் தமன் தான் இசையமைக்கிறார்.