Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடங்கியது மிலி திரைப்படத்தின் படபிடிப்பு

மலையாளத்தில் வெளிவந்த ட்ராபிக் திரைப்படத்திற்கு பிறகு தற்போது அதே திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராஜேஷ் பிள்ளை.

இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இன்று, நவீன் பாலி, அமலாபால் நடிப்பில் உருவாக்கும் மிலி என்ற மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்.

எடிட்டர் மகேஷ் நாராயணன் எழுதிய கதை தான் மிலி, இத்திரைப்படத்தின் கதையை எழுதிய அவர் பின்பு அவருடன் வர்த்தக நண்பராக இருந்த ரஜேஷ் பிள்ளையிடம் கொடுக்க முடிவு செய்து, பின் இத்திரைப்படத்தை ரஜேஷ் இயக்கத்தில், சதீஷ் ஆப் ஆர்டினரி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அனிஷ்லால் ஒளிப்பதிவு செய்ய, இத்திரைப்படத்திற்காக இசையமைக்க இருக்கிறார்கள் கோபி சுந்தர் மற்றும் ஷான் ரஹ்மான்.

மேலும் திருமணத்திற்கு முன்பு மல்லுவுட்டில் அமலாபால் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என கருதப்படுகிறது.