தமிழில் உருவாகி வரும் பர்மா படத்தின் ஆடியோ பாடல் வெளியீடு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் பேனரில் சுதர்ஷன் வேம்புட்டி தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளியில் பயின்ற, சுதர்ஷன் எம். குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பர்மா படத்தில் மைக்கேல், ரேஷ்மி மேனன், சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் க்ரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் என்கிறார் படத்தின் இயக்குனர்.
தற்போது இப்படம் இறுதி கட்டத்தில் இருப்பதால், ஜுன் மாதம் இறுதியில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.







