Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூலை 18ல் பிட்சா 3d

குறும்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான 'பீட்சா இரண்டு வருடத்துக்கு முன்பு தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம்.

இந்த ஒரு படம் தான் குறும் பட இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு வழி தடமாக அமைந்தது என்று சொல்லலாம். அதற்கு பிறகு சில குறும்பட இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் கால்பதித்து வெற்ற்யும் கண்டனர்.

அதன் பிறகு இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார்.இந்தியில் இப்படத்தை அக்‌ஷய் அக்கினேனி இயக்கியிருக்கிறார்.

ஹீரோவாக அக்‌ஷய் ஓபராய் நடித்திருக்கிறார். பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயகிருஷ்ணா குமடி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிக்கி, சுரப் கால்சி, ஷமிர் டான்டன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர்.

’யுத்தம் செய்’, ’முகமூடி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.

3டி தொழிநுட்பத்தில் உருவாகிவரும் இப்படம் ஜூலை 18ல் வெளியாகிறது. இப்படத்தை சித்தார்த் ராய் கபூருடன் இணைந்து, பிஜோய் நம்பியார் தயாரித்திருக்கிறார். யுடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

தமிழில் கலக்கிய பிட்சா ஹிந்தியிலும் சக்கைபோடு போடுமே என்று பொறுத்து இருந்து பார்ப்போம்