Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் நாடகத்துக்கு தாவிய பசுபதி

தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பசுபதி அதற்கு பிறகு பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் ஆனார். பசுபதி அடிப்படையிலே நாடக நடிகர், கூத்துபட்டறையில் பலபேருக்கு நடிப்பு பயற்சி கொடுத்தவர்

மேஜிக் லேண்ட் நிறுவனம், மற்றும் எஸ்.எஸ்.இண்டர்நேஷன் அமைப்பும் இணைந்து பொன்னியின் செல்வன் நாடகத்தை கடந்த 7ம் தேதி சென்னை மியூசிக் அகடாமியில் அரங்கேற்றியது. கல்கியின் வரலாற்று நாவலை நடிகர் குமரவேல் நாடக வடிவமைக்கியிருக்கிறார்.

இந்த நாடகத்தில் பசுபதி பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலனாக நடிக்கிறார்.மிக பிரம்மாண்டமாக தோட்டா தரணி கைவண்ணத்தில் செட்களை அமைக்க நிஜமான வாள் சண்டைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் நடைபெற இருக்கிறது

இந்த நாடகத்தின் ஒத்திகை மற்றும் நாடகத்திற்காக தனது சினிமா படப்பிடிப்புகளை மூன்று மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் பசுபதி.