ஜிது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
மற்ற மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்யும் மொத்த உரிமையையும் ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் பெற்றிருந்தார்.
தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ஸ்ரீப்ரியா இயக்கி இருக்கிறார். 'துருஷ்யம்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்து முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், மீனா வேடத்தில் கௌதமி நடிப்பார் என்று கூறப்படுகிறது. மலையாள துருஷ்யம் படத்தின் பின்னணியில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்ததாக இருந்தது.
தமிழில் சைவ வேளாளர் பின்புலம் கொண்டு காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இதற்காக திருநெல்வேலியில் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.




