Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தம்பியின் கஷ்டம் ஆர்யாவுக்கு அதிர்ஷ்டம்!

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் கண்டிப்பாக அது ஆர்யா தான். இவர் காட்டில் தற்போது மழை பெய்தாலும், இவர் தம்பியின் திரை வாழ்க்கை எப்போதும் வரண்டே தான் இருக்கிறது.

இவர் நடித்த புத்தகம் படம் படுதோல்வியடைந்ததால், நானே என் தம்பியை வைத்து படம் தயாரிக்கப்போகிறேன் என்று படித்துறை என்ற படத்தை எடுத்தார், ஆனால் இந்த படம் இன்றுவரை திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கிறது.

இதை இன்கம்டாக்ஸுக்கு நஷ்டக்கணக்குக் காட்டுவதற்காக படித்துறை படத்தை ஆர்யா பயன்படுத்திக்கொண்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது இவர் தம்பி நடித்திருக்கும் படம் அமரகாவியம். இப்படம் வெளிவருமா? இல்லை ஆர்யாவின் நஷ்டக்கணக்குகாக போகுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மெர்சி வீடியோ பார்க்க கிளிக் செய்க