பிரான்ஸில் அடிக்கடி நடக்கும் மொபைல் போன் வழிப்பறியை மையமாகக் கொண்டு சதா பிரணவன் இயக்கி இருக்கும் குறும்படம் தினப்பயணம்.
சதாபிரணவன், ரஜிந்த் ஆகிய இருவருக்கும் குறும்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதனால் வட்டிக்கு கடன் வாங்கி, அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த கதாநாயகன் பாஸ்கியிடம் தமது படத்தில் நடிக்க அனுமதிகேட்டு போகிறார்கள்.
பாஸ்கி அறிமுகமாகும் இடமும், படத்தை பற்றி அவர்களின் உரையாடலும் சூப்பர். அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல் மொபைல் போன் வழிப்பறி கும்பலிடம் அடிவாங்கி ஐபோனை பறிகொடுத்துவிட்டு வரும் சந்தர்ப்பத்தில், அதைப்பற்றி விசாரிக்கும் தமிழர்களிடம் நக்கலாக சொல்லும் வசனங்கள் அட்டகாசம்.
இறுதியில் சிம் காட் அளவு சுதந்திரத்தையாவது வாங்கி கொடுங்கோ என்ற வசனம் செம. மொத்தத்தில் கதைக்களம் மிகவும் சூப்பர்.