சாதாரணமாகவே தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்கள் கூட எடுக்க பயப்படும் ஜேனர் சயன்ஸ் ஃபிக்ஸன் தான். ஆனால் ஈழத்தில் இருக்கும் ஒரு கலைஞன் அந்த ஜேனரை தைரியமாக எடுத்து ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார் டி.ஷமிதன்.
ஞாபக மறதியால் தான் கடந்து வரும் சம்பவங்கள், திட்டமிட்டு வைத்திருக்கும் நிகழ்வுகள் என எதுவுமே நினைவில் இல்லை தீபன் என்னும் இளைஞனுக்கு.
ஆனால் தன் ஞாபக மறதியை ஒரு குறையாக நினைக்காமல் வரமாகவே நினைக்கிறான் தீபன். பழைய ஞாபகங்கள் இல்லாததனால் தான் சந்தோசமாக வாழ முடிகிறது என்று கருதுகிறான்.
ஆனால் காலப்போக்கில் தீபனின் ஞாபக மறதியினால் நண்பர்கள் பாதிக்கப்பட்டு கோபம் அடைகிறார்கள். மேலும் இவன் காதலித்து வந்த அந்த பெண்ணும் விலகிச் செல்கிறாள்.
பின் அவனின் நண்பன் ஒருவன் மூலம் விஞ்ஞானி ஒருவரிடம் செல்கிறான். பின் அந்த விஞ்ஞானி போன் மெமரி கார்ட்டு போல ஒரு சிப்பை தீபன் மூளையில் வைக்கிறார்.
அதன்பிறகு தீபன் எதிர்பார்த்தது நடந்ததா? அவனுக்கு கிடைத்த ஞாபக சக்தியால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்ததா? என்பது இக்குறும்படத்தின் கதை.
கதைக்களம் செம, அதோடு வித்தியாசமான முயற்சி. இக்குறும்படத்தில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் நச் சூப்பர்.