சமீபத்தில் ஹீரோயினை அடித்து சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் மற்றும் நடிகர் களஞ்சியம். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை கதாநாயகியின் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார்கள் என்று இவர் மறுத்துள்ளார்.
கோடைமழை படத்தில் நான் கதாநாயகியை அடிப்பது போல் ஒரு காட்சி, அதில் அவரை நான் அடிக்கும் போது சற்று வேகமாக பட்டுவிட்டது, பிறகு உடனே அவரும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் சில பத்திரிக்கைகளில் ஏதோ கொடுமை செய்தது போல் குறிப்பிட்டுள்ளனர், இதை யார் இப்படி வெளியே சொன்னது என்று எனக்கே தெரியவில்லை என விளக்கம் தந்துள்ளார்.
களஞ்சியம் ஏற்கனவே தன்னை கொடுமை படுத்தியதாக அஞ்சலியே கூறியிருந்தார், இது தான் வாய்ப்பு என்று ஒருவேளை அவர் தான் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.