Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் சாமி நீ? எங்கயா இருந்த இவ்ளோ நாளா?

ஆசிரியரை குத்திக்கொன்ற சிறுவனை போலிஸ்காரர் ஒருவர் விசாரணை செய்யும் காதலைத்தவிர வேறொன்றுமில்லை திரைப்படம் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சரண்யா மோகன், சாட்டை யுவன், இமான் அண்ணாச்சி போன்றோர் நடித்துள்ள இப்படத்தை “நினைத்தேன் வந்தாய்”, “ப்ரியமானவளே” போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்கியுள்ளார்.

உடனே என்னடா ஏதும் சமூக பிரச்சனையுள்ள படமா? இல்லை சீரியஸா ஏது சொல்லவராங்களா? என்று குழம்ப வேண்டாம். சிந்தனையை சிரிப்புடன் சொன்னால் தான் உடனே போய் சேரும் என்று இந்த சிறுவனை வைத்து கலாட்டா செய்கிறார்கள்.

போலிஸ் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை சொல்லி அவரையே வியக்க வைக்கிறான் இந்த சிறுவன்.

‘உனக்கு எந்த சார் புடிக்கும் என்று கேட்டால் எனக்கு ரமணன் சார் தான் பிடிக்கும், ஏன்னா அவர் தான் மழை வரும் என்று சொல்லி ஸ்கூலுக்கு லீவு வாங்கி தருவார்’ என்றும் ‘எல்லா பாடத்திலும் 100 மார்க் வாங்குறவன் கை கட்டி சம்பளம் வாங்குகிறான், 40 மார்க் எடுப்பவன் அரசியல்வாதியாக சம்பளம் கொடுக்கிறான்’ என்று நெத்தியடி அடிக்கிறான்...

இந்த ரகளையை நீங்களும் பார்க்க இதோ உங்களுக்காக...

ஸ்டார் 67 திரைப்படத்தின் இலவச திரையிடல் நிகழ்ச்சி