Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருங்கால முதலமைச்சர் வடிவேலுவா?

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவந்த படம் தெனாலிராமன். இப்படத்தில் இவர் முழுநீள கதாநாயகனாக நடித்து மறுபடியும் ரீஎண்ட்ரி கொடுத்தார், ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால் மனுஷன் நொந்து போய்விட்டார்.

சரி இப்படியே இருந்தா எப்படி? மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிப்போம் என்று ரெடியாக இந்தமுறை இவருக்கு கதை சொல்ல வந்தவர் பெரியார், பாரதி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களை தமிழுலகத்திற்கு தந்த ஞான.ராஜசேகரன்.

கதையெல்லாம் நல்லா தான் இருந்துச்சாம், ஆனாலும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லையாம், ஏனென்றால் இக்கதையில் இறுதியாக வடிவேலு முதலமைச்சர் ஆவது போல் படம் முடியுதாம். ஆஹா கிளம்பிட்டானுங்க என்று அவருக்கு மைண்ட் வாய்ஸ் கேட்க, உடனே நோ சொல்லிட்டாராம்.

தினப்பயணம் குறும்படம் விமர்சனம்