Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரம்பா விவாகரத்து? குஷ்பு கோபம்!

தமிழ் சினிமாவின் 90களில் இளைஞர்களின் மனதில் கனவுகன்னியாக இருந்தவர் ரம்பா. பின் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவந்த இவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக தலைக்காட்டினார். தற்போது மீடியாக்களில், ரம்பா சில பிரச்சனை காரணமாக தன் கணவரை பிரிந்தார் என செய்தி வந்தது.

இதை கண்ட குஷ்பு மிகவும் கோபமாக தன் டுவிட்டரில் ‘சமீபத்தில் நான் கனடா சென்றபோது ரம்பாவின் வீட்டிற்கும் சென்றேன். அவர் தனது கணவர், குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது, என்பதை தெரிந்து கொண்டேன், மீடியாக்கள் இதுபோன்ற உண்மைக்கு தவறான வதந்திகளை பரப்பிவிட்டு தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள்’ என்று டுவிட் செய்துள்ளார்.

கவனம் குறும்படம் வெளியீடு