Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனவுகள் விற்பவன் – குறும்படம் விமர்சனம்

கனவுகள் விற்பவன் கதை மனநிலை குன்றிய ஒருவருக்கும், சிறுவனுக்கும் நடக்கும் அன்பு பறிமாற்றத்தை சொல்லியிருக்கிறது.

ஒரு பூங்காவில் மனநிலை குன்றிய ஒருவர் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் ஒரு சிறுவன் போய் அமர்கிறான். முதலில் அவரை பார்த்து பயப்படும் அச்சிறுவன், பின் அவர் சொல்வதை கேட்கிறான்.

அந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது. மனம் குன்றியவர் செய்யும் சைகைகளும், சிறுவன் முக பாவனைகளும் அப்பா, அப்படியே இயல்பாக இருக்கிறது. பின் இருவரும் அடிக்கடி சந்தித்து விளையாடி வந்தனர்.

இப்படி சந்தோஷமாக போகும் இவர்களிடையில் ஒரு பிரிவு ஏற்படுகிறது. திடீரென்று அச்சிறுவனின் குடும்பம் டெல்லி சென்றுவிட்டது.

அச்சிறுவனின் பிரிவை தாங்க முடியாமல், அழுது புலம்புகிறான். கடைசியில் மனநிலை குன்றியவர் என்ன ஆகிறார், மறுபடியும் அவருக்கு அன்பு கிடைக்கிறதா, அச்சிறுவன் என்ன ஆனான் என்பது கதை.

ரம்பா தன் கணவரை பிரிந்தாரா? குஷ்பு கோபம்!