Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழம்பெரும் நடிகை 5 லட்சம் வெள்ள நிவாரண நிதி

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களிடம் வழங்கினார்.

அந்நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன் மற்றும் அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.