Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி ஒரு பரிசை உங்கள் நண்பர்களுக்கு தரப்போகிறீர்களா?

குறும்படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஜாலியான குறும்படமாக, சக நண்பருக்கு பிறந்தநாள் பரிசை இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டாட அவனது நண்பர்கள் பிளான் போடுகிறார்கள் என்று தான் தோன்றியது.

ஆனால் இறுதியில் ஒருபோதும் யாரும் இதுபோன்ற பிறந்தநாள் பரிசை யாருக்கும் தர வேண்டாம் என்ற கருத்தை முன்வைக்கிறார் இயக்குனர். அப்படி என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? அதை குறும்படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்.

முதலில் திரைக்கதையை இப்படி முடித்ததற்கு விபூஷன் மீது கோபம் எழும்பியது, ஏனென்றால் கதை அப்படி நன்றாக இருந்தது. ஆனால் கடைசியாக அவர் சொல்ல வந்த கருத்துக்கு இறுதி முடிவை ஏற்கத்தான் வேண்டும்.

நல்ல முயற்சி, கதையில் நடித்த அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்திருந்தனர். கதைக்கு லியோனார்ட்டின் இசை பக்க பலமாக இருந்தது, எடிட்டிங்கில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு நீளமும் குறைத்திருக்க வேண்டும்.

திறுட்டி விசிடி குறித்து பேசிய விஷால்