Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதில் காதல் மட்டுமின்றி காமமும் உள்ளது? ராம்

தமிழ் சினிமாவின் புது முயற்சிகளை சிலர் மட்டுமே துணிந்து எடுப்பார்கள். அந்த வகையில் கற்றது தமிழ், தங்கமீன்கள் என தொடர்ந்து தரமான படமாக எடுத்து வருபவர் ராம்.

இவர் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் தரமணி. இப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணியளவில் வரவுள்ளது.

இப்படத்தில் ஆண்ட்ரியா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் உயரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ராம் கூறுகையில் ‘அடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபிய குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்த குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ள வைப்பார்கள்.

இப்படத்தில் அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண்-பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு’ என கூறியுள்ளார்.

பல சர்ச்சை கேள்விக்கு அதிரடி பதில் கூறும் விஷால்