Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷிற்கு என்ன தான் பிரச்சனை- ஏன் இந்த முடிவு?

தனுஷ் அடுத்தடுத்து அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதில் தொடரி என்ற படம் இவர் நடித்து முடித்து பல நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால், இப்படத்தின் டீசர் கூட இன்னும் வரவில்லை, பாடல்கள் மே 8 பிறகு 18 வரும் என தேதிகள் தள்ளிக்கொண்டே போகின்றது.

தனுஷ் முதன் முதலாக பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகின்றது.

அப்படியிருக்க நமக்கு கிடைத்த தகவலின் படி தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் முதல் வாரத்தில் நடக்கும் என கூறப்படுகின்றது.

ஏன் இந்த படத்திற்கு மட்டும் இத்தனை தாமதம் என யாருக்கும் தெரியவில்லை. இப்படி தனுஷ் தன் முடிவை மாற்றி மாற்றி வருவது ஏன் என்றும் புரியவில்லை.

மருது படத்தின் சிறப்பு விமர்சனம் பார்க்க