Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சூப்பர் கூட்டணியுடன் களமிறங்கும் வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கியவர் வடிவேலு. இவரின் தவறான சில முடிவால் சில காலம் நடிக்காமல் இருந்தவர் மீண்டும் நடிக்க வந்தும் சரியான படங்கள் எதுவும் அமையவில்லை.

நீண்டநாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் வெற்றிக்கூட்டணியான சத்யராஜுடன் இணையவுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் - வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் திலீப் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

6'2', `கோவை பிரதர்ஸ்', `லூட்டி', `இங்கிலீஷ்காரன்', `மண்ணின் மைந்தன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் சத்யராஜ்-வடிவேலு காமெடி கூட்டணி கலக்கியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இக்ககூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை