Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி நடந்தால் அமெரிக்காவில் வசூல் எப்படி வரும்? விநியோகஸ்தர் புலம்பல்

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளிவந்த போகன் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் வசூலில் படம் பின்தங்கவில்லை.

முதல் நாள் வசூலில் பைரவாவிற்கு அடுத்த இடத்தை போகன் பிடித்துள்ளதாக பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க திருட்டு டிவிடிகள் மற்றும் இணையதளங்களில் நேற்றே படம் வெளியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சிலர் முழுபடத்தையும் முகநூலில் பதிவேற்றிவிட்டனர். அதை பல லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.

இப்படி இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி வசூல் வரும் என அமெரிக்காவில் படத்தை விநியோகிக்கும் நிறுவனம் ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளது.