Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இந்த ஏரியா விநியோகஸ்தர்களா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ரூ 100 கோடி என்பது பெருமையான விஷயமாகிவிட்டது. படத்தின் கதை எப்படியுள்ளது என்று தான் யாரும் பார்ப்பதில்லை, வசூல் என்ன? என்பதே எல்லோரின் கேள்வியும்.

இதில் வசூல் மன்னர்களாக இருப்பது ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோர் தான், இவர்களின் படங்கள் எத்தனை நாட்களில் ரூ 100 கோடி கிளப்பில் இணைவது என்பதிலும் பெருமை அடங்கியுள்ளது.

ஆனால், உண்மையாகவே பைரவா, சிங்கம்-3 எல்லாம் ரூ 100 கோடி வசூல் வரவே இல்லை, கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், இல்லையெனில் விஜய், சூர்யா படங்களை திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் எடுக்க மாட்டோம் என அந்த ஏரியா விநியோகஸ்தர்கள் அவர்களுக்குள்ளே பேசி முடிவு செய்துள்ளார்களாம்.

இதுக்குறித்து தானு கூறுகையில் ‘இவர்கள் இப்படித்தான் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறார்கள், லாபம் வரும் படத்திற்கு கூட, வசூல் வரவில்லை என கூறி வருகிறார்கள்’ என தெரிவித்துள்ளாராம்.