Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக்கு மட்டுமில்லை தமிழ் சினிமாவிற்கும் ஒரு மைல்கல் தான்

கார்த்தி பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால், அவரின் அறிமுக படமான பருத்திவீரனை யாராலுமே மறக்க முடியாது.

ஏன், அவரால் கூட மறக்க முடியாமல் தான் பல படங்களில் அதே தோரனையில் வசனம் பேசுவார். அந்த படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர கார்த்திக்கு மட்டுமில்லை தமிழ் சினிமாவிற்கு சில காலம் தேவைப்பட்டது.

அத்தனை வன்முறையையும் யார் மனதையும் நோகடிக்காமல் கொடுத்தார் இயக்குனர் அமீர். ஏ,பி,சி என அனைத்து செண்டர்களிலும் மெகா ஹிட் அடித்தது.

மேலும், இளையராஜாவிற்கு பிறகு அத்தனை அழகான கிராமிய பாடல்கள் கொடுத்தது யுவன் மட்டுமே என்று இந்த படம் நிரூபித்தது, ராம்ஜியின் ஒளிப்பதிவில் பொட்டல்காடு கூட அழகு ரம்மியமாக காட்சி அழைத்தது.

இப்படம் வெளிவந்து இன்றுடன் 10 வருடம் ஆகின்றது, இதற்கு அனைவருக்குமே தன் நன்றியை தெரிவித்துள்ளார் கார்த்தி. இதோ...