Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்

அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம் வேதாளம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இப்படத்தை விரைவில் நடிகர் பவன் கல்யான் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார், வேதாளம் படத்தை ஒரு பிரபல யு-டியூப் சேனல் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டது.

இப்படத்தை தற்போது வரை 1 கோடி பேர் பார்த்துள்ளனர், இவை மிக குறுகிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்திற்கு கமெண்ட் பாக்ஸிலும் நல்ல விமர்சனமே வந்துள்ளது.

இதற்கு முன் விஜய் நடித்த புலி படம் இத்தகைய சாதனையை நிகழ்த்தியது.