Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர் இல்லைனா பாகுபலி இல்ல... பாகுபலி 2 முழு ரகசியம், ராஜமௌலி ஓபன் டாக்

கடந்த வருடம் ரூ 200 கோடி செலவில் ராஜமௌலி எடுத்த பாகுபலி ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து உலகம் முழுவதும் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. முதல் பாகத்தை விட பாகுபலி 2 அதிக அளவு பேசப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் ராஜமவுலி.

பிரபல பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டியில் இதுவரையும் அவர் சொல்லாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதை காண்போம்.

அவர் இல்லைனா பாகுபலி இல்ல...

பிரபாஸ் மற்ற நடிகர்களை போல கிடையாது. 4 வருடங்கள் பாகுபலிக்காகவே மட்டும் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர். வேறு எந்த படங்களில் அவர் நடிக்கவில்லை.

பேஸ்மெண்டை மட்டும் அவருக்கு கூறிவேன். அதை உள்வாங்கி அப்படியே நடித்து அசத்தி விடுவார். நான் அடிக்க சொல்வது என்ன தெரியுமா? பிரபாஸ் இல்லனா பாகுபலி இல்லை.

அனுஷ்காவால் பாகுபலி தாமதமா?

அனுஷ்காவை பொறுத்தவர் ஒரு டெமோ காண்பித்தால் போது. ஓகே சார், ட்ரை பண்றேன். ரெடி போல என களத்தில் இறங்கிவிடுவார். சிறு சிறு திருத்தங்கள் மட்டுமே சொன்னால் போதும்.

அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே முன்பே எடுத்துவிட்டோம். பிறகு அவர் நடித்த படத்திற்கா வெயிட் கூட்டினார். குறைப்பதற்காக தீவிர முயற்சி எடுத்தார்.

பாகுபலி 1 ல் அவர் நடித்தது போல் இல்லாதால் அவரின் சில் காட்சிகளுக்கு டிஜிட்டல் டச் அப் செய்திருக்கிறோம்.

வெற்றிக்கு காரணம் என்ன?

தயாரிப்பாளர்கள், நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் அனைவருமே தான் காரணம். படத்தை பொறுத்த வரை இரண்டாம் பாகத்திலேயே தான் கதையை முடிக்க வேண்டும்.

ஆனால் கதாபாத்திரங்கள் அப்படி அல்ல. இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கும். இன்னும் பல தொடர்கதைகளை எடுக்கலாம். இதில் மதன் கார்க்கியின் பங்கு முக்கியமானது.


பாகுபலி 2 ஹைலைட் என்ன?

பாகுபலி 1 படத்தில் இருக்கும் கேரகடர்கள் எப்படிப்பட்டவர்கள் என காண்பிக்கப்பட்டது. இது கதையின் சிறு பகுதியே. இனி தான் இவர்களில் முக்கிய பங்கு என்ன என்பது தெரியும்.

சிவடுவுடைய வலிமை என்ன என்பதை பார்த்திருப்பீர்கள். பல்வாள் தேவனுடைய பலம் என்ன எனவும் காட்டிவிட்டோம். இருவரும் மோதினால் எப்படி இருக்கும் என நீங்கள் பார்த்ததில்லையே.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..

படம் ட்ரைலர் எப்போது?

டீசருக்கு பிறகு ட்ரைலருக்காக காத்திருப்பீர்கள். சில computer generated shots, digital intermediate வேலைகள் இன்னும் இருக்கிறது.

ஆனால் மார்ச் 15 ரிலீஸ் கன்ஃபார்ம். பாகுபலி 2 வுடன் கதை ஓவர்.