Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு

விவசாயிகள் டெல்லியில் போராடி வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களின் பிரச்சனை எப்போது தீரும் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களது போராட்டம் மிகவும் அழுத்தமாக இருக்கிறது.

இந்நிலையில் சினிமாவில் இருக்கும் சில பிரச்சனைகளை பேசுவதற்காக நடிகர் விஷால் மற்றும் அவரது குழுவினர் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அவர்களை சந்தித்துள்ளனர். சந்திப்புக்கு பின் விஷால் பேசும்போது, திருட்டு வீடியோ, இணைய தளங்களில் சினிமாக்கள் வெளிவருவதை தடுப்பது பற்றி கூறினோம். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

திருட்டு வீடியோ பிரச்சினை தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. தமிழக திரைப்படத்துறை வளர்ச்சிக்கான சில கோரிக்கைகளையும் முன்வைத் துள்ளோம். அவற்றை நிறைவேற்றி தருவதாக கூறி இருக்கிறார்.

செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தவும் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.