Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்களால் விஜய் படத்தின் வசூலுக்கு வரும் செக்?

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

விஜய் படங்களுக்கு தமிழகம் தாண்டி கேரளாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது, இதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடாவில் விஜய்க்கு தற்போது தான் மார்க்கெட் பெரிதாகி வருகின்றது.

இவரின் தெறி அங்கு 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்-61வுடன் அமீர்கானின் சீக்ரட் சூப்பர் ஸ்டார், அஜய் தேன்கன் நடிக்கும் கோல்மால் ஆகிய படங்கள் வருகின்றது.

தமிழகத்தில் எந்த பாதிப்பு இல்லை என்றாலும், கேரளா, வட இந்தியா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் விஜய்-61 வசூலுக்கு கொஞ்சம் செக் தான்.