Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்

சென்ற வருடம் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் தற்போது கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளிவந்தது.

ரகுமானை பாராட்டும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின் "இந்தியாவில் பிறந்தது கடவுள் கொடுத்த வரம், உங்கள் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் இனி ஒலிக்கும்" என கூறியுள்ளார்.