Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸுக்கு ராஜமௌலி கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு

தொடர்ந்து ஐந்து வருடங்கள் பாகுபலி என்ற ஒரே படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார் பிரபாஸ். இரண்டாவது மற்றும் இறுதி பாகம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

பிரபாஸ் தவிர வேறு எந்த நடிகரும் இப்படி ஐந்து வருடங்கள் தொடர்ந்து 600 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள் என ராஜமௌலி பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் பிரபாஸின் கடின உழைப்பை பாராட்டி அவருக்கு பாகுபலி படத்தில் அவர் பயன்படுத்திய கவசத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, படத்தை தயாரித்த ARKA entertainments இதுவரை படத்தின் ரிலீஸ் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின்மூலம் சுமார் 500 கோடி அளவிற்கு சம்பாதித்திவிட்டனர். ரிலீசுக்கு பிறகு அது 1000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.