Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை

நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து சொந்தமாக ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்பது தான் விஷால் அணியினரின் ஆசை. இதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தி பணம் தயார் செய்தனர்.

அதோடு அண்மையில் கூட கமல், ரஜினி என பல நடிகர்கள் முன்னணியில் கட்டடத்திற்கான பூஜையும் போடப்பட்டது. இதனால் நடிகர் சங்க குழுவினரும் மிகவும் உற்சாகமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்க குழு நிலத்தை அபகரித்துவிட்டதாக உயர்நீதிமன்றனத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது அந்த வழக்கு தொடர்பாக இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.