Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து சமீபத்தில் தொலைக்காட்சிகளில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுபற்றி நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனர், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா கூறுகையில், விவசாயிகளின் போராட்டம் வெளியில் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் அம்பலத்துக்கு வருவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதும் ஒருவகையில் குற்றமே. அதைத்தான் இன்று நிறைய சேனல்கள் செய்து வருகின்றன.

நான் தயாரித்த 'நாட்டுப்புற பாட்டு' 'துள்ளுவதோ இளமை' என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன். ஆனால் என் படங்களின் எந்தவித உரிமையும் இல்லாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? " என்று கொதிக்கிறார்.