Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்

சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

விரைவில் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், நீண்ட வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்வதாக இருந்தது.

ஆனால், அவர் அதை செய்யவே இல்லை, அதற்காக நடந்த பஞ்சாயத்து எல்லாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு படம் செய்வதாக சம்மதித்த சிவகார்த்திகேயன் இயக்குனரையும் நீங்களே கூறுங்கள் என்றாராம்.

சிறுத்தை படம் எடுத்த போதே சிவா மீண்டும் ஸ்டுடியோ க்ரீனுக்காக ஒரு படம் இயக்குவதாக இருந்ததாம், இவர்கள் இரண்டு பேர் கால்ஷிட்டும் தற்போது ஸ்டுடியோ க்ரீனிடம் இருப்பதால் சிவகார்த்திகேயன் - சிவா படம் உருவாக திட்டமிட்டுள்ளார்களாம்.