Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் எழுச்சி தான் இந்த சர்வைவா- பாடல் விமர்சனம்

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடியை தாண்டிவிட்டது.

இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் சர்வைவா பாடல் இன்று வெளிவந்தது.

இப்பாடல் வெளிவந்த 50 நிமிடத்தில் 1 லட்சம் பேர் கேட்டுவிட்டனர், மேலும், இப்பாடல் படத்தில் அஜித்தின் தன்னம்பிக்கை குறித்து பேசுவது போல் உள்ளது.

  • இருட்டு பாதைகளில், தன்னம்பிக்கை தீப்பந்தம்
  • துணிந்தவன் முன் வந்தால், விதிகளே மாறி வெல்லும்
  • சரித்திரம் புரட்டு, போராட்டம் பல்லாயிரம்
  • தடைகள் வென்றவர் யார், சாமானியன் எல்லோரும்

ஆகிய வரிகளிலேயே தெரிகின்றது, அஜித்தை ஏமாற்றியவர்களை அவர் மீண்டு வந்து பழிவாங்குவது போல் தான் படத்தில் காட்சிகள் இருக்கும், அந்த இடத்தில் இந்த பாடல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.