Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாதாரண மனிதன் சாதனையாளன் ஆக முடியுமா?

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருமே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே எண்ணத்தை நிஜமாக்குவார்கள்.

அந்த வகையில் பல சாதனையாளர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள் தான், பலரும் ஒருவர் சாதனையை கூட்டம் போட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

ஒரு சிலர் மட்டுமே அந்த கூட்டத்தில் ஒருவனாக உயர்ந்து தன்னை மற்றவர்கள் வியந்து பார்க்கும்படி உயர்வார்கள்.

அப்படி ஒரு பாசிட்டிவ் எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைக்க நாளை உலகம் முழுவதும் வெளிவருகின்றது கூட்டத்தில் ஒருத்தன்.

ஏற்கனவே இப்படத்தின் ப்ரோமோ, டீசர், ட்ரைலர் என அனைத்தும் ஹிட் அடிக்க, ரசிகர்கள் மத்தியில் கூட்டத்தில் ஒருத்தன் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.