Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர்களையே வருத்தப்பட வைத்த அர்ஜுன் ரெட்டி வசூல்

தெலுங்கு சினிமா மெல்ல இந்தியளவில் புகழ் பெற ஆரம்பித்துள்ளது. பாகுபலி இந்தியா முழுவதும் மாஸ் வெற்றியை பெற, அர்ஜுன் ரெட்டி கிளாஸ் வெற்றியை பெற்றுள்ளது.

தமிழ், கன்னடம், ஹிந்தி என பலரும் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர், இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நேற்று வரை 1.7 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாம்.

மகேஷ் பாபு, பவன் கல்யான் என முன்னணி நடிகர்களின் படங்கள் கூட இந்த வருடம் இத்தகைய வசூலை அமெரிக்காவில் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.