Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் குறித்து வந்த நம்பத்தகுந்த தகவல்

அஜித் எப்போதும் தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பார். அப்படித்தான் வீரம் முடிந்து சிவாவிற்கு விவேகம், வேதாளம் என இரண்டு படங்களின் வாய்ப்பை தந்தார்.

விவேகம் படம் விமர்சனங்கள் ரீதியாக பல முரன்பாடுகள் இருந்தாலும், வசூல் ஓரளவிற்கு நன்றாக இருந்ததாகவே கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அஜித் தன் அடுத்தப்படத்தையும் சிவாவிற்கே இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.

சிவாவும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்க, இப்படம் குறித்த தகவல் அக்டோபர் மாதம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.