Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவுடன் மோதும் விஷால்

சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் வைத்திருப்பவர். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர், 6 வருடங்களுக்கு பிறகு பண்டிகை நாள் ஒன்றில் சூர்யா படம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொங்கலுக்கு சூர்யாவுடன் களத்தில் இறங்குவது விஷாலும் தான், ஆம், விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாம்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார், யுவன் இசையமைத்து வருகின்றார்.