Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் கார்த்திக் திரைப்பயணத்தில் இது தான் அதிகம்- வெற்றியை தக்க வைப்பாரா?

கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து அவர் படங்களை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் தடுமாறினார்.

அதை தொடர்ந்து தற்போது ரங்கூன், இவன் தந்திரன் என ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார், ஓரளவிற்கு சினிமாவில் தற்போது தான் சுதாரித்து நடித்து வருகின்றார் என கூறலாம்.

இவர் நடிப்பில் அடுத்த வாரம் பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஹரஹர மஹாதேவகி என்ற படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கார்த்திக் திரைப்பயணத்தில் அதிக திரையரங்கில் ரிலிஸாகும் படம் இது தானாம், ரங்கூன், இவன் தந்திரன் போல் இந்த படமும் வெற்றியை பெற்று அவருக்கு மேலும் ஒரு நல்ல இடத்தை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.