Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் எல்லையை தாண்டும் தளபதி- மெர்சல் பிரமாண்ட வியாபாரம்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே டீசர், பாடல்கள் என அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு இதுவரை தெலுங்கில் பெரிய வெற்றியே கிடைத்தது இல்லை, இதன் காரணமாக மெர்சலில் எப்படியும் தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்க வேண்டும் என களத்தில் இறங்கிவிட்டார்.

மெர்சல் தெலுங்கு டப்பிங் எப்படியும் ரூ 8 கோடிக்களுக்கு மேல் விற்க படக்குழு முடிவு செய்துள்ளதாம், இதுவரை வந்த விஜய் படங்களிலேயே தெலுங்கில் அதிகம் தொகைக்கு விற்கப்படும் படம் மெர்சல் தானாம். இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டதாம்.