Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானில்லை, ரஜினி தான் அவர்களுடன் கூட்டணிக்கு ஏற்றவர்: கமல்

நடிகர் கமல்ஹாசன் இன்னும் 100 நாட்களில் அரசியல் கட்சியை துவங்குவார் என சமீபத்தில் அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் குதிப்பது பற்றி ரஜினியிடம் ஏற்கனவே பேசிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு ரஜினி தான் அதற்கு சரியானவர் என தெரிவித்துள்ளார்.

"ஆன்மிகத்தில் ரஜினி நம்பிக்கை உடையவர், பா.ஜ., உடனான கூட்டணிக்கு அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவுவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன், கம்யூனிஸவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்" என கமல் பேட்டியில் கூறினார்.