Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலாறு காணாத தோல்வி, இத்தனை சதவீதம் ஸ்பைடர் நஷ்டமா?

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஸ்பைடர். இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றது.

ஆனால், தமிழகத்தில் இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வசூல் தான் தற்போது வரை வருகின்றது, ஆனால், ஆந்திரா, தெலுங்கானாவில் அப்படியே தலைக்கீழ் தான்.

பலரும் முருகதாஸ் தமிழ் இயக்குனர் என்பதால் முழுவதும் தமிழ் நடிகர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், முதல் நாள் இப்படத்தின் ஷேர் ரூ 16 கோடி வரை இருந்தது, ஆனால், 5 நாள் முடிவில் 26 கோடி தான் ஷேர் வந்துள்ளது.

இதன் மூலம் ஸ்பைடர் தெலுங்கு பதிப்பு 60%-க்கு மேல் நஷ்டத்தை சந்திக்கும் என அடித்து கூறுகின்றனர்.