Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் கத்தி படத்தில் காயின் சீனுக்கு பின்னால் இருந்த நபர் இவர் தான்!

விஜய்யின் முக்கிய படங்களில் கத்தியும் ஒன்று. முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் காயின் ஃபைட் செய்யும் காட்சி ரசிகப்பட்ட ஒன்றாக இருந்தது. இது பற்றி இப்படத்தில் பணியாற்றிய DOP செல்வ குமார் விரிவாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இக்காட்சி மிக முக்கியமானது. அதில் நான் போர்டில் இருந்தேன்.

லைட் கட், ஆன், ஆஃப் என சரியாக இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க வேண்டும். மிஸ் ஆகிவிடக்கூடாது. ஏனெனில் ஸ்டண்ட் நடிகர்கள் மேலிருந்து குதிப்பார்கள். ரிஸ்கான சீன்கள் இருந்தது. அதுவும் இதுவும் ஒன்றாக அமைய வேண்டும்.

படத்தில் நடிகர் சதீஷ் மெயின் ஆஃப் செய்வார். ஆனால் உண்மையில் அதை செய்ததது நான் தான். வெளியிலிருந்து வாக்கி டாக்கி மூலம் பேசிக்கொள்வோம். இந்த பிராஸஸ் சரியாக அமைந்ததால் யூனிட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் என கூறியுள்ளார்.