Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கின் இசையமைப்பாளர் இவரா?

தெலுங்கு சினிமாவே கொண்டாடி தீர்த்த படம் அர்ஜுன் ரெட்டி. இப்படம் தமிழக இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

தற்போது இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார், இப்படத்தை பாலா இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஹீரோயினாக நடிக்க ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது ஹீரோயினாக பல படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா ஷர்மாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது இப்படத்திற்கு இசை யார் என்பது தான் பெரிய கேள்விக்குறி, நமக்கு கிடைத்த தகவலின்படி இளையராஜா அல்லது யுவன் இவர்களில் யாராவது ஒருவர் தான் இசையமைப்பாளராக இருக்கக்கூடும்.

அதிலும் குறிப்பாக யுவன் தான் இருப்பார், ஏனெனில் இவை இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களுக்கான படம் இளையராஜாவை விட்டால் பாலா யுவனிடம் தான் செல்வார் என்பது எல்லோருக்கும் தெரியும்.