Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான தகவல்

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மெர்சல் பட்டையை கிளப்பி வருகின்றது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகின்றது.

இந்நிலையில் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து தவறாக பேசியுள்ளார்கள், அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் கட்சி கூறியது.

இதை தொடர்ந்து இவை இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, தற்போது மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்குவதாகவும், அதற்கான விதிமுறைகளை தயாரிப்பாளர் உடனே எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது நேற்று முழுவதும் மெர்சல் படத்திலிருந்து காட்சியை நீக்கக்கூடாது என்று கூறிய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.

மேலும், அப்படி கட் செய்வதாக இருந்தால் வரும் திங்கள் வரை மெர்சல் எந்த காட்சியும் கட் செய்யாமல் தான் திரையிடப்படும், செவ்வாய் முதல் தான் காட்சிகள் கட் செய்யப்படுமாம்.