Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலை அள்ளும் அமீர்கானின் சீக்ரட் சூப்பர் ஸ்டார்

அமீர்கான் நடிப்பில் கடைசியாக வந்த தங்கல் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இவர் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் சீக்ரட் சூப்பர் ஸ்டார்.

இப்படத்தில் இவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார், பாடகியாக நினைக்கும் ஒரு சிறுமியின் கனவு தான் இப்படம்.

இப்படம் முதல் நாள் ரூ 4.80 கோடி வசூல் செய்ய, அதன் பின் எங்கு திரும்பினாலும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருந்தது.

இரண்டாவது நாள் இப்படம் ரூ 9.30 கோடி வசூல் செய்து வசூலை அள்ளியுள்ளது, இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் எப்படியும் இப்படம் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.