Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும்! தமிழிசைக்கு பிரபல இயக்குனர் பதிலடி

மெர்சல் படம் பற்றி பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார்.

நடிகர்கள் சம்பளம் பற்றி பேசியிருந்த அவர் "மெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன், "தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே?" என பதிலடி கொடுத்துள்ளார்.