Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் முதலில் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்: கருணாஸ்

நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் காட்சி ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மெர்சல் பட காட்சிகள் நீக்கப்படவேண்டும் என ஒரு கட்சி கேட்டுவந்த நிலையில் எந்த சீனும் நீக்கப்படவில்லை என தயாரிப்பாளரிடமிருந்து சற்று முன் அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு அரசு விதித்த கட்டணங்களை தாண்டி திரையங்களில் அதிக விலை நிர்ணயத்து வசூலிக்கின்றனர். அதற்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

"தணிக்கை செய்து வெளிவந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்" எனவும் அவர் கூறியுள்ளார்.