Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும்: ப.சிதம்பரம்

மெர்சல் பட சர்ச்சை பற்றி பேசும்போது காங்கிரசை சேர்ந்த ப.சிதம்பரம் "இனி அரசை புகழ்ந்து மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்" என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் "மெர்சல் படத்திற்கு பா.சிதம்பரம் தான் பைனான்ஸ் செய்தாரா?" என கேட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிதம்பரம், "பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் மெர்௪லுக்கு பணம் கொடுத்தவர்கள் தான். மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும்" என கூறியுள்ளார்.